2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புதிய ஆசிரியர் பயிலுநர்களுக்கான பதிவு

Suganthini Ratnam   / 2017 ஜூன் 18 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

தாழங்குடா தேசிய கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகியுள்ள புதிய ஆசிரிய பயிலுநர்களுக்கான பதிவு நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி கல்லூரியில் முன்னெடுக்கப்படும் என அக்கல்லூரிப் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரம் தெரிவித்தார்.

இந்தக் கல்லூரியில் இம்முறை  7 பாடங்களுக்காக 235 ஆசிரிய பயிலுநர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இவர்களுக்கான  கற்றல் கற்பித்தல் பயிற்சி எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

ஆரம்பக்கல்விக்கு 30 பேரும் நாடகமும் அரங்கியலுக்கு 30 பேரும் விஞ்ஞானத்துக்கு 50 பேரும் உடற்கல்விக்கு 50 பேரும்  கலையும் கைப்பணிக்கு 15 பேரும் சித்திரத்துக்கு 15 பேரும் வடிவமைப்பு தொழில்நுட்பத்துக்கு 45 பேரும்  தெரிவாகியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X