2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புதிய பாடசாலை ஆரம்பிக்க வேண்டுகோள்

Editorial   / 2021 நவம்பர் 10 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான மர்ஹும் முஹைதீன் அப்துல் காதரின் பெயரில் புதிய பாடசாலையொன்றை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி வலயத்தில் அறபா நகரில் இந்தப் பாடசாலையை ஆரம்பிக்கும் வேண்டுகோள், பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வேண்டுகோள் அடங்கிய ஆவணங்கள், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்திடம் நேற்று செவ்வாய்க்கிழமை (09) கையளிக்கப்பட்டது.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான நஸீர் அஹம,ட் முன்னாள் பிரதியமைச்சரான மர்ஹும் முஹைதீன் அப்துல்காதர், கல்குடாத் தொகுதி முஸ்லிம்கள் மத்தியில் மறக்கப்படாமல் இடம்பிடித்திருக்கும் மிகச் சிறந்த பண்பான அரசியல்வாதியாவார்.

அவரது பெயரில் ஒரு பாடசாலை ஆரம்பிப்பது அன்னாரை நினைவுபடுத்த ஒரு வாய்ப்பாக அமையும். அதனால் அவரின் பெயர் தாங்கிய புதிய பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சிக்கு தான்  பூரண ஒத்துழைப்பு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X