Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2018 ஜூன் 05 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிலாற்சாலைக் கட்டுமாணப்பணியை இடைநிறுத்துமாறு, ஏறாவூர்ப்பற்று பிரதேசபை, நேற்று (04) உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, மேற்படி தொழிற்சாலையின் கட்டட நிர்மாணப்பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட புல்லுமலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் உற்பத்தி நிலையத்துக்கு எதிராக, அப்பகுதி மக்களால் பதுளை-செங்லடி வீதியை மறித்து நேற்று (04) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டது.
சவூதி நாட்டுக்குச் சொந்தமான தனியார் நிறுவனம் ஒன்று, இந்த குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கான பிரதேச மக்களின் கருத்துகள் பெறப்படாமலும், தன்னிச்சையாகவும் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக செயலாளர் என்.வில்வரெட்னம், பிரதேசசபையின் தவிசாளர் நா.கதிரவேல் ஆகியோர் மக்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச செயலக செயலாளர் ஆகியோருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்றபட்டதைத் தொடர்ந்து, அவ்விருவரும் அங்கிருந்து பாதுகாப்பாக பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, குறித்த கட்டட நிர்மாணப்பணிக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக, உடனடியாக அவற்றை நிறுத்துமாறு பிரதேசசபையின் தவிசாளர் பணிப்புரை விடுத்தார்.
இதற்கமைவாக, கட்டட நிர்மாணப்பணி இடைநிறுத்தப்பட்டது.
5 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
51 minute ago
1 hours ago