2025 மே 14, புதன்கிழமை

பெப்ரவரி 28இல் தொழில் சந்தை

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகள், தொழில் தேடுபவர்களுக்கு  தொழில் ஊக்குவிப்பு, தொழில் நியாயமான திட்டங்கள் அடங்கிய தொழில் சந்தை, மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி அதிகார சபையின் மனித வளத் திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், சம்பந்தப்பட்ட பங்குதாரர் ஆகியோருடன் இணைந்து, இந்த தொழில் சந்தையை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சித்திட்டம், மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் பெப்ரவரி 28ஆம் திகதி காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழிற் சந்தை நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு, தொழில்தேடும் இளைஞர், யுவதிகளை, இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி அதிகார சபை கேட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X