Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 25 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதை பொருட்கள் வியாபாரிகள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை, 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவர் மற்றும் மாவடிச்சேனை, பசீர் வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நீண்ட காலமாக போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பெண் சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 2,650 ரூபாய் பணம் 5,750 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கண்காணிப்பு கேமரா சேமிப்பகம் (டிவி.ஆர்) என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஆண் சந்தேக நபரிடமிருந்து 5, 670 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டார தெரிவித்தார்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபர்களையும் சான்றுப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பேரின்பராஜா சபேஷ்
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025