Freelancer / 2022 மே 23 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசததில் இருந்து அம்பாறை மகா ஓயா பிரதேசத்திற்கு பெற்றோலை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் 45 வயதுடைய பொலிஸ்சாஜன் மற்றும் ஓய்வு பெற்ற 41 வயதுடைய இராணுவ வீரர் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லாவெளி வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 910 லீற்றர் பெற்றோலும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
10 minute ago
19 minute ago
46 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
46 minute ago
20 Dec 2025