2025 மே 14, புதன்கிழமை

பேத்தாழை பொது நூலகத்தின் நூலக கீதமும் கொடியும் அறிமுகம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொது நூலகத்தின் ஏழாவது வருட நிறைவும்பரிசளிப்பு விழாவும், நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்றது.

நூலகப் பொறுப்பாளர் திருமதி தாரணி தங்கத்துரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் கலந்துகொண்டார்.

இதன்போது வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகத்தின் நூலகக் கொடியும், நூலகக் கீதமும் கலந்துகொண்ட அதிதிகளால் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், நூலகத்தின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிதிகளால் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

அத்துடன், தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி, வாழைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கலை, இலக்கியம் சார்பான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

மேலும், அதிதிகள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நூலகக் கீதத்தை இயற்றிய கலைஞர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

பேத்தாழை பொது நூலகம் தேசிய ரீதியில் மூன்று விருதுகளைப் பெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .