Princiya Dixci / 2021 மார்ச் 07 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் பொலிஸாரின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை பேஸ்புக்கில் மோசமாக விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், நேற்று (06) கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செயயப்பட்டபோது, அவரை மார்ச் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து ஏறாவூர் பொலிஸார் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளில் பாடசாலை ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகநபர் அந்நடவடிக்கையை பேஸ்புக் மூலம் மிக மோசமாக விமர்சித்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தார் என்பதே சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டாகும்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago