2025 மே 15, வியாழக்கிழமை

பொலிஸ் நிலையக் கட்டடம் கல்வி அலுவலகத்துக்கு ஒப்படைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 நவம்பர் 01 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையம் இயங்கி வந்த கட்டடம் விடுவிக்கப்பட்டு, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்துக்கு இன்று (01) ஒப்படைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில், படையினர் வசமுள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொதுக் கட்டடங்கள், பொதுமக்களின் காணிகள் என்பவற்றை, அவர்களிடமே ஒப்படைக்கும் நடவடிக்கையின் கீழ், இப்பொலிஸ் நிலையக் கட்டடமும், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுக் கட்டடங்களை, எதிர்வரும் 15ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் விடுவிப்பதென,  கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி விசேட செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கூட்டத்தின் போது, ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடம், கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் அமையப்பெற்ற காணியொன்றில், நேற்றுக் காலை திறந்து வைக்கப்பட்டது.

இப்புதிய கட்டடத்தை, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவான் ஜெயசிங்க, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மெண்டிஸ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குமார சிறீ, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிசிரி பண்டார உட்பட பொலிஸ் அதிகாரிகள், சமயப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .