Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஒலுமுதீன் கியாஸ்
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான இலங்கை ஆசிரியர் சேவை 31(அ) தரத்துக்கு, மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருப்பது உடன் நிறுத்தப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
தவறும் பட்சத்தில், பட்டதாரிகளும் பொதுமக்களும் வீதியில் இறங்குவர் என்றும் இதற்காகப் பாரிய போராட்டம் வெடிக்குமென்றும் அவர் அறிவித்தார்.
இது குறித்து அவர் நேற்று (18) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட பட்டதாரிகளுடன் சேர்த்து மேலதிகமாக பதுளை, பொலன்னறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தறை, குருநாகல் மாவட்டத்தில் வாழும் பட்டாதாரிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
“கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களப் பாடசாலைகளுக்கான நியமனம் என்ற ரீதியில் வெளி மாகாண பட்டதாரிகளை கிழக்கில் உள்வாங்கிக் கொள்வதற்காகவே, இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
“இது கிழக்கு மாகாணப் பட்டதாரிகளை வெகுவாகப் பாதிக்கும். இது குறித்து மாகாண மட்டத்தில் இயங்கும் பல்வேறு பட்டதாரிகள் அமைப்புகள் எனது கவனத்துக்கு முன்வைத்திருக்கின்றன.
“எனவே, முதலில் இந்த விண்ணப்பக்கோரலை உடன் ரத்து செய்ய வேண்டும். தற்போது பதவி ஏற்றுள்ள பிரதமரது அமைச்சரவை நியமனங்கள் நடைபெற்ற பின்னர் நான் பிரதமரை நேரில் சந்தித்து இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
2 hours ago