Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்
“போதைப்பொருளால் ஏற்படும் அழிவைத் தடுப்போம், இளம் தலைமுறையைக் பாதுகாப்போம்” என்னும் தலைப்பிலான போதைப்பொருளுக்கு எதிரான கையெழுத்துப் பெறும் போராட்டம், மட்டக்களப்பில் இன்று (18) முன்னெடுக்கப்பட்டது.
போதைப்பொருயை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதியைக் கோரும் வகையில், 50 ஆயிரம் கையெழுத்துகளைப் பெறும் இந்தப் போராட்டத்தை, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,தேசிய மீனவ பெண்கள் சமூகம், மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டிருந்தன.
இந்த நாட்டில் போதைப்பொருள் பாவனையால் இளம் சமூதாயம் அழிந்துசெல்வதுடன், குடும்பங்கள் மத்தியிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுவருவதாகவும் அவற்றைத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டுமென இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது
நாட்டின் 15 மாவட்டங்களில் இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் மார்ச் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினத்தன்று, ஜனாதிபதியிடம் இந்தக் கையெழுத்துகள் கையளிக்கப்படவுள்ளன எனவும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago