2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

போரதீவுப்பற்றுப் பிரதேச சபை அமர்வில் விசேட ஆராய்வு

Editorial   / 2020 மே 07 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் 27ஆவது சபை அமர்வு, தவிசாளர் யோகநாதன் ரஜனி தலைமையில், வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மட்டபத்தில் நேற்று (06) நடைபெற்றது.

இச்சபை அமர்பில் பிரதித் தவிசாளர் நா.தருமலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கடந்த காலத்தில் பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், கிராமங்களின் உள் வீதிகள் புனரமைப்பு, வீதி மின் விளக்குகளைப் பொருத்துதல், தற்போயை வரட்சி காலத்தில் பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குடிநீர் விநியோகம் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

மேலும், கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிருமிநாசினி விசிறும் செயற்பாடுகள், பொது மாயானங்கள், விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பு உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்களுடன் கருத்துகள் பரிமாறப்பட்டு, கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X