Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வம்மியடி யூற்று கிராமத்தில்
காணி ஒன்றினுள் கசிப்பு உற்பத்திக்கான கோடா கொள்கலன்கள் கிராம சேவையாளர்களால் செவ்வாய்க்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது...
கிராம மக்களிடம் இருந்து வம்மியடியூற்று கிராம சேவகர் அ.சிறிநாதனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்து
செயற்பட்டு குறித்த காணியினுள் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான கோடா கொள்கலன்கள் மற்றும் ஏனைய பொருள்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த
நிலையில் கிராம சேவையாளர்களான அ.சிறிநாதன் மற்றும் திக்கோடை கிராம சேவையாளரான தி.தியதீஸ்வரன் ஆகியோரால் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொருள்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது மட்டக்களப்பின் பல இடங்களில் இவ்வாறான கசிப்பு உற்பத்தி சட்ட விரோத செயற்பாடு அதிகரித்து கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago