2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்புப் படுகொலையின் 26ஆவது நினைவுதினம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 26ஆவது நினைவுதினம் நேற்றுப் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்புக் கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவுதினத்தில் சித்தி விநாயகர் கோவிலில் விசேட வழிபாடு நடைபெற்றதுடன்,  அங்குள்ள நினைவுத்தூபிக்கு அருகில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேற்படி பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இரவு, 17 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 28 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X