2025 மே 08, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பில் சேதனப்பசளை விற்பனை நிலையம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சேதனப்பசளை விற்பனை நிலையம் நேற்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு உப அலுவலக வளாகத்திலுள்ள கடைத்தொகுதியில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையம், வார நாட்களில் காலை 08 மணி தொடக்கம் மாலை 04.30 மணிவரை திறந்திருக்கும். ஒரு கிலோகிராம் சேதனப்பசளை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மண்முனைப்பற்றுப் பிரதேச சபையானது யுனொப்ஸ் நிறுவனத்துடன்; இணைந்து கடந்த இரண்டு வருடங்களாக நடைமுறைப்படுத்திவரும் திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் மூலம் சேதனப்பசளை தயாரிக்கும் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட சேதனப் பசளைகளை விற்பனை செய்வதற்காக இந்த விற்பனை நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யுனொப்ஸ் நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்ட நிர்வாக அதிகாரி எஸ்.சிவனந்தராஜா, சமூக விழிப்புணர்வு நெறியாளர் வி.குமார், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் கே.ஜீவராஜா, மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.சதாசிவம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X