2025 மே 14, புதன்கிழமை

புதையல் தோண்டிய இருவருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2016 மார்ச் 09 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

த.தவக்குமார்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய  இரண்டு சந்தேக நபர்களை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று (08) உத்தவிட்டுள்ளார்.

மேற்படி பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருவரும் நடமாடுவதை அவதானித்த பிரதேசவாசிகள், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய, மேற்படி இரண்டு சந்தேகநபர்களையும் திங்கட்கிழமை (07) கைதுசெய்த பொலிஸார், அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள் மற்றும்; பூசைப்பொருட்கள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X