2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போரதீவுப்பற்றில் 3 இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 03 இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வேலைத்திட்டத்துக்கும் 75,000 ரூபாய் படி 03 வேலைத்திட்டங்களுக்கும் 225,000 ரூபாயை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்மன்றத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் சி.அருளானந்தம், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

போரதீவுப்பற்றுப் பிரதேச இளைஞர் கழகங்களிடமிருந்து இதற்காக 20 விண்ணப்பப்படிவங்கள் கிடைத்துள்ளன. 20 விண்ணப்பப்படிவங்களிலிருந்தும் 03 விண்ணப்படிவங்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வு நாளை வெள்ளிக்கிழமை  போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.  

ஒவ்வொரு செயற்றிட்டத்துக்கும் வழங்கப்படும் 75,000 ரூபாயை வைத்துக்கொண்டு இளைஞர் கழகமானது தன்னார்வத் தொண்டர் அமைப்புகள், தனவந்தவர்கள், ஏனைய உதவி வழங்குநர்களிடமிருந்து மேலதிகமாக 175,000 ரூபாயைப் பெற்று குறித்த வேலைத்திட்டத்தை 250,000 ரூபாய்க்குள் பூர்த்திசெய்ய வேண்டுமெனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X