2025 மே 13, செவ்வாய்க்கிழமை

போரதீவுப்பற்றில் 22,689 ஏக்கரில் சிறுபோகம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 02 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் இம்முறை 22,689 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அப்பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  
சிறுபோக நெற்செய்கைக்குரிய ஆரம்ப வேலைகளை எதிர்வரும் முதலாம் திகதி மேற்கொள்ளுதல், விதைப்பு வேலையை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை மேற்கொள்ளுதல், இரண்டு சில்லுகள் கொண்ட லான்மாஸ்டரைப் பயன்படுத்துவதற்கான கூலி ஏக்கருக்கு 1,200 ரூபாய் படியும் நான்கு சில்லுகள் கொண்ட உழவு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான கூலி ஏக்கருக்கு 4,000 ரூபாய் படியும் கூலி ஆள் ஒருவருக்கு நாளொன்றுக்கு 800 ரூபாய் படியும் வழங்குதல், விதைப்பு மேற்கொள்ளப்படும் வயல்களிலுள்ள கால்நடைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்தல் ஆகியவை தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X