2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாலை மரத்தில் பற்றிய தீ அணைப்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முன்பிள்ளைப் பராய பராமரிப்பு நிலைய வளவுக்குள் நின்றிருந்த பாரிய பாலை மரமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பற்றிக் கொண்ட தீ, இன்று சனிக்கிழமை  காலை 8.30 மணியளவில் அணைக்கப்பட்டுவிட்டதாக அநுராதபுரம் தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

அநுராதபுரம் மேற்கு சர்வோதய நிலைய அமைவிடத்துக்குள் அமைந்துள்ள முன்பிள்ளைப் பராய பராமரிப்பு நிலைய வளவுக்குள் நின்றிருந்த பாலை மரத்திலேயே இந்த தீ பற்றிக் கொண்டது.

கருகிப்போன புல் மற்றும் சருகுகளில் மூண்ட தீயே பாலைமரத்தில் பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றி உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு அறிவித்ததும் ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர்  தீயை அணைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X