2025 மே 23, வெள்ளிக்கிழமை

மகள்மார் வன்புணர்வு; தந்தை கைது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில், இரண்டு சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அச்சிறுமிகளின் தந்தையை, நேற்று (24) கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

5 வயது மற்றும் 4 வயது சிறுமிகளை, அந்த சிறுமிகளின் தந்தை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என, அந்த சிறுமிகளின் தாய் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை முறைப்பாடு ஒன்றை செய்ததையடுத்து, இதனை விசாரணை செய்து வரும் காத்தான்குடி பொலிஸார் குறித்த சிறுமிகளின் தந்தையை கைது செய்துள்ளனர். 

இந்த சிறுமிகளின், தாயும் தந்தையும் விவாகரத்து பெற்றுள்ள நிலையில் தந்தை வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், குறித்த தந்தை பிள்ளைகளை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என, தாய் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

இந்த சிறுமிகள் இருவரும், தந்தை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக, தாயிடம் தெரிவித்ததையடுத்தே, தாய், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அந்தச சிறுமிகள் இருவரும், தமக்கு நடந்த சம்பவத்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலமளித்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது. 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சிறுமிகள் இருவரையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனையை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X