2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மகள் உயிரை மாய்த்தமையால் தந்தையும் உயிரை மாய்த்தார்

Editorial   / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

17 வயதுச்  சிறுமி ஒருவர், நேற்று (08) மாலை தனது உயிரை மாய்த்துக் கொண்டதையடுத்து, அச்சிறுமியின் தந்தையும் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், இன்று (09) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு, அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் என்பவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிறுமி, ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில், சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, சிறுமி மரணத்துக்குக் காரணம் சிறுமியின் தந்தை என அயலவர்கள் பேசத் தொடங்கியதையடுத்து, சிறுமியின் தந்தையும் மரணித்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X