2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 06 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அரசியல்வாதிகள் தொடர்ந்து குரல் எழுப்ப முன்வர வேண்டும் என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (5)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'பிரச்சினையொன்று ஏற்படும்போது, அப்பிரச்சினை தொடர்பாக கருத்துகளை வெளியிடுவதும், ஊடகங்களில் அறிக்கையிடுவதும்,  பேஸ்புக்கில் பதிவிடுவதும் போன்ற நடவடிக்கைகள் மூலமாக தாங்களும் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்புவதாகத் தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகள், ஒரு சில நாட்கள் கடந்த பின்னர் அப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துள்ளதா என்பதை மறந்து விடுகின்றனர்.

'முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் இந்த  நிலைமைய அரசாங்கம் நன்றாக புரிந்துகொண்டுள்ளதால், அவர்களின்; கோஷங்களைக் கண்டுகொள்ளாமலும்  மக்களின் பிரச்சினைகளையும் அப்படியே  விட்டுவிடுகின்றது' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X