Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மட்டக்களப்பு, இலுப்படிச்சேனை பிரதேசத்தில் மணல் அகழ்வு, குடிநீர் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பாக பல தடவை ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முன்வைத்த போதிலும் இதுவரை தீர்வும் கிடைக்கவில்லை. மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றனர்” என இலுப்படிச்சேனை கிராம அபிவிருத்தி சங்கத்த தலைவர் சி.சர்வானந்தன் கவலை வெளியிட்டார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலுப்படிச்சேனையிலிருந்து வேப்பவெட்டுவான் பகுதிக்கு இ.போ.ச பஸ்ஸொன்றை சேவையில் ஈடுபடுத்துமாறு, பலமுறை சோரிக்கை முன்வைக்கப்பட்டு, கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையிலும் இதுவரை பஸ் சேவை நடைபெறவில்லை.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வதற்காக தனியார் எவருக்கும் அனுமதி வழங்கப்படக்கூடாது; கமநல மற்றும் கிராம அபிவிருத்தி அமைப்புகளுக்கு மாத்திரம் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்க வேண்டும் என, கடந்த முறை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது தனியாருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .