2025 மே 07, புதன்கிழமை

‘மக்கள் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்’

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டு  மக்கள் பாரிய பிரச்சினைக்குள்  தள்ளப்பட்டுள்ள அதேவேளை அரசாங்கமும் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, தாமரைக்கேணியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின்  காரியாலயத்தில் மாவட்ட இணைப்பாளர் நடேசன் சுந்தரேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்று, மூன்று மாதங்கள் கடந்த நிலையில் நாட்டு  மக்களின் நிலை என்ன ஆனது எனக் கேள்வியெழுப்பினார்.

மத்திய வங்கி  ஊழலுடன்  சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவதாகத்  தெரிவித்து   இந்த அரசாங்கம்  ஆட்சிக்கு வந்ததாகவும் ஆனால் தற்போதைய   அரசியல்வாதிகள் கதைக்க முடியாத முக்கிய விடயமாக மத்திய வங்கி  ஊழல்   மாறியுள்ளதாகவும் கூறினார்.

உண்மையில், இந்த அரசாங்கத்தை உருவாக்கிய மக்களுக்கே  இந்த அரசாங்கம் தாக்குதல் நடத்துகின்றதாகக் குற்றஞ்சாட்டிய அவர், “திருடர்களை பிடிக்கப்போவதாக அரசாங்கம்  கூறிய நிலையில்,  தற்போது திருடர்கள்தான்  அரசாங்கத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார்கள்” என்றார்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X