Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 22 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு -கொழும்பு நெடுஞ்சாலையில் முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள மஞ்சள் கடவையில் இன்று காலை இரண்டு பஸ்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவத்தின்போது, வீதியைக் கடந்துகொண்டிருந்த மாணவர்கள் வீதியோரத்துக்குப் பாய்ந்து சென்று, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என மாணவர்களும் பெற்றோரும் தெரிவித்தனர்.
கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்துக்குச் சொந்தமான இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸும் மட்டக்களப்பு தனியார் பஸ்ஸுமே ஒன்று மோதியுள்ளது.
காத்தான்குடியிலிருந்து காலை 6.30 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இவ்விரு பஸ்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்து இடம்பெற்ற வேளையில், குறிப்பிட்ட மஞ்சள் கடவையில் பொலிஸார் எவரும் கடமையில ஈடுபட்டிருக்கவில்லை.
மேலும், விபத்துக்குள்ளான இ.போ.ச பஸ்ஸில் பயணித்த பொலன்னறுவையைச் சேர்ந்த சிலர், பஸ்ஸிலிருந்து இறங்கிவந்து இனவெறுப்பு வார்த்தையைப் பேசி, தனியார் பஸ்ஸை பொலன்னறுவையைக் கடந்து செல்லவிட மாட்டோம் எனக் கூறியதாக தனியார் பஸ் சாரதி தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்தை அடுத்து, அவ்விரு பஸ்களையும் ஏறாவூர் பொலிஸார் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதுடன், அப்பஸ்களின் சாரதிகளிடமும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago