Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 26 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று, களுவாஞ்சிக்குடியில் நேற்று முன்தினம் (24) இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், கட்சியின் மட்டு அம்பாறை ஊடகப் பேச்சாளர் சாந்தன் உட்பட கட்சியின் மட்டக்களப்பு நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், முன்னாள் போராளிகள் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும், அண்மையில் சமூகவலைத்தள பதிவு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்பிலுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் நாகராசா பிரதீபராசாவின் வழக்கு விடயங்கள் தொடர்பிலும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுதல், முன்னாள் போராளிகளின் அரசியற் செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
51 minute ago
1 hours ago