2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் இருவரை கொன்றது டெங்கு

Editorial   / 2022 மே 20 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

டெங்கு நோயால்   இளம் குடும்பஸ்தர்கள் இருவர் மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை 19.05.2022 வரை சுமார் 240 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, நாட்டில் டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால்  மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் புதன்கிழமை தொடக்கம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X