Freelancer / 2024 ஜனவரி 25 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்ககளப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகளை மீண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த இரு குண்டுகளும் அகப்பட்டுள்ளன.
அதனை அவதானித்த குறித்த மீனவர் களுவாஞ்சிகுடி பொஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரண்டு குண்டுகளையும் மீண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவைப் பெற்று குண்டு செயலிழக்கும் பிரிவினரைக் கொண்டு இக்குண்டுகள் செயலிழக்கச் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த யுத்த காலத்தில் பட்டிருப்பு பாலத்தில் இருமருங்கிலும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். R

7 minute ago
13 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
15 minute ago