2025 மே 26, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு வெற்றிடம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 19 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக 10 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன இலங்கைப் பொதுச் சுகாதாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைச் செயலாளர் அருணாசலம் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தற்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் 75 பேர் கடமையாற்றுகின்றார்கள்.

வெற்றிடமாகவுள்ள 10 சுகாதாரப் பரிசோதகர்களுக்கான பிரதேசங்களில்; பதில் கடமையை தற்போது கடமையிலுள்ள பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

இதேவேளைஇ மட்டக்களப்பில் கடமையாற்றும்  சுகாதாரப் பரிசோதகர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அலுவலகப்பை கூட தரப்படவில்லை எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X