Princiya Dixci / 2021 ஜூன் 08 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றையதினம் 1,000 பேருக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் இன்று (08) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இந்த கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
பிரதேச செயலக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், உள்ளூராட்சிமன்ற ஊழியாகளுக்கு இன்றைய தினம் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுகள் மக்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என மாவட்டச் செயலாளர் இதன்போது ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .