2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் பாரிய கடல்கொந்தளிப்பு; மீனவர்கள் அவதி

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள பாரிய கடல்கொந்தளிப்புக் காரணமாக, கடற்றொழில் நடவடிக்கைககள் முற்றாக சீர்குலைந்துள்ளன.

இந்நிலைமை நாளையும் (13) தொடருமென, மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

கடுமையாக கடல் சீற்றம் காரணமாக, கடற்றொழில் நடவடிக்கைககளில் அவதானமாக இருக்குமாறு, மாவட்ட வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளதுக்கமைய, கடலுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்த்துள்ளனர்.  

இதன்காரணமாக, மீனவர்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் மீன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  சுமார் 26,000 குடும்பங்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X