Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 மே 24 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயு கோரி நேற்று (23) பிறபகல் லொறியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை எரிவாயுவை பெறுவதற்காக சுமார் 800 பேர் பயினியர் வீதியில் வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் 400 பேருக்கு அன்றைய தினம் எரிவாயுக்கள் வழங்கப்பட்டன.
வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள், எரிவாயுவை பெறாது தொடர்ந்து மாலை வரை காத்திருந்து வீடுகளுக்குச் சென்றனர்.
மறுநாள் சனிக்கிழமை எரிவாயு வழங்கப்படுமென அதிகாலை 3 மணி தொடக்கம் வீதியில் வெற்றுச் சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருந்தனர். ஆனால், அன்றும் எரிவாயு வழங்கப்படாதைதயடுத்து, தொடர்ந்து இரவு - பகலாக நேற்று வரை மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று (23) முகவர்களால் லொறியில் கொண்டுவரப்பட்ட 250 எரிவாயுக்களை வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வழங்கி முடித்தனர். எனினும், வரிசையில் காத்திருந்த ஏனையவர்கள் எரிவாயுவை பெறாத நிலையில் எரிவாயு தந்தால் தான் லொறி இங்கிருந்து செல்ல அனுமதிக்க முடியுமென லொறியை வெளியேற விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸாரிடம், ஆர்ப்பாட்டகாரர்கள் எரிவாயு தரப்படும் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு இலக்கம் வழங்குமாறும் கோரி லொறியை செல்லவிடாது சுற்றிவளைத்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் எரிவாயு முகவருடன் கலந்துரையாடி, புதன்கிழமை எரிவாயு தருவதாகவும் அதற்காக வரிசையில் நிறப்பவர்களுக்கு இலக்கங்கள் முகவர்களால் தரப்படுமென செய்து உறுதியளித்ததையடுத்து லொறி அங்கிருந்து செல்ல ஆர்ப்பாட்டகாரர்கள் அனுமதியளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
8 hours ago