2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் ரூ.910 மில். அரச உதவி வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி, க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் முடக்கலால் பாதிக்கப்பட்ட 182,826 குடும்பங்களுக்கு 910 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரச நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாவட்டச் செயலாளர், மட்டக்களப்பு மாவட்டத்தில் வயோதிபர் கொடுப்பனவாக 15 ஆயிரத்து 51 குடும்பங்களுக்கு 70 மில்லியன் 52 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாயும், வலது குறைந்தவர்களுக்குரிய கொடுப்பனவாக 6 ஆயிரத்தி 651 குடும்பங்களுக்கு 30 மில்லியன் 32 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாயும், சமுர்த்திப் பயனாளிகள் காத்திருப்புப் பட்டியலிலுள்ள 1 இலட்சத்தி 36 ஆயிரத்தி 177 குடும்பங்களுக்கு 680 மில்லியன் 8 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் இதுவரையில் நிவாரண உதவியாக வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 23 ஆயிரத்தி 422 குடும்பங்களுக்கு 110 மில்லியன் 71 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும், சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவாக 248 குடும்பங்களுக்கு 12 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவும், நிவாரணம் கிடைக்கவில்லையென மேன்முறையீடு செய்த 1,277 குடும்பங்களுக்கு 63 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கும் மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமும் நலன் விரும்பிகள் மூலமும் 69 ஆயிரத்தி 449 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள்  விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்டச் செயலாளர் கலாமதி தகவல் தந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X