Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், பைஷல் இஸ்மாயில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மார்பகப் புற்றுநோயாளர்கள் 1,000 பேர் கடந்த வருடம் இனங்காணப்பட்டுள்ளனரென, மட்டக்களப்பு மாவட்ட மார்பகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.இக்பால் தெரிவித்தார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மார்பகப்புற்று நோய் மாதத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் புற்று நோயாளர்கள் தொகை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நோயை ஆரம்பத்தில் கண்டறிவதன் மூலம் இதிலிருந்து இருந்து பாதுகாப்பைத் தேடிக் கொள்வதுடன், நோய் மேலும் பரவாமல் தவிர்த்துக்கொள்ள முடியும்.
“இந்நோய் பரபுவதற்கு நமது உணவுப் பழக்கங்களும் பரம்பரையும் காரணங்களாக இருக்கின்றன. இதைக் குணப்படுத்த முடியாது என்று மனநிலையில் இருப்பதை விட ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதன் மூலம் குணப்படுத்தக் கூடிய வழிமுறைகள் உள்ளது” என்றார்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி பாமினி அச்சுதன் தலைமையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி, கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம், விநாயகபுரம் சிகிச்சை நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வுப் பேரணி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சென்றடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
27 minute ago
44 minute ago