Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 22 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள 37 பாடசாலைகளில், க.பொ.த சாதரண பெறுபேற்றை 100 சதவீதம் அதிகரிக்க, பாடசாலைகளில் முன்னேற்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டத்துக்கான அங்குரார்ப்பணக் கலந்துரையாடல் கூட்டம், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில், அதிபர் இ.பாஸ்கர் தலைமையில் இன்று (22) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர்கள் கூட்டாக இணைந்து, மாணவர்களின் கற்றலை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
“அவ்வாறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது, 100 சதவீதம் மாணவர்களின் பெறுபேறுகள் பாடசாலைக்குக் கிடைக்கப்பெறும். இவ்வாறு க.பொ.த.சாதாரணப் பெறுபேறுகளை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை எமது கல்வி வலயத்திலுள்ள 37 பாடசாலைகளில் முன்னெடுத்து திட்டமிட்டு வருகின்றோம்.
“எதிர்வரும் வாரத்தில், பாடசாலைகள் தொடங்கியவுடன், இவ்வருடம் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு தோற்றக்கூடிய மாணவர்களுக்கு கற்பிக்கூடிய அலகுகளை உரிய காலத்துக்குள் கற்பித்து முடிக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
01 May 2025