2025 மே 21, புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பதில் அரசாங்க அதிபர் நியமனம்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றுச் சென்றதையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஒருவர் நியமிக்கப்படும் வரை, மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார கடமையாற்றவுள்ளார்.
இவர் எதிர்வரும் திங்கட்கிழமை(9)யன்று தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்கவுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஒருவரை நியமிப்பதற்காக சிலரின் பெயர்கள் அடிபடுகின்ற போதிலும் இன்னும் அமைச்சரவை யாரையும் நியமிக்கவில்லையெனவும் விரைவில் புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவார் என மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படும் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .