2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு புதிய செயலாளர் நியமனம்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய மாவட்டச் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்தவரும் தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றும் கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம், பொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் நேற்று (14) பிற்பகல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாவட்டச் செயலாளராகக் கடமையாற்றிய திருமதி கலாமதி பத்மராஜா, பொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு உடனடியாக அமுலாகும் வரையில் இணைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .