2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு வாவியில் மீன் உற்பத்தி பாதிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஜூன் 17 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைக்கொண்டு மீன்பிடியில் ஈடுபடுதல், வாவிக்கு குறுக்கே பாதைகள் போடுதல் மற்றும் விவசாயக் கழிவுகள் வாவியுடன் கலத்தல் போன்ற மனித செயற்பாடுகளால், இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் மீனினங்கள் முற்றாக அருகிவருவதுடன், மீன்களின் இனப்பெருக்கமும் குறைவடைந்துள்ளதாக, மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் சி.குரூஸ் தெரிவித்தார்.

ஓட்டி, ஓரா, தோலி, அதக்கை, சிலுந்தல், மணலை, திரளி மற்றும் கிளக்கன் உட்பட பல  வகையான மீனினங்கள் அருகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு வாவியில் கடற்றொழில் அமைச்சினால் தடைசெய்யப்பட்ட சிறிய கண்களைக்கொண்ட தங்கூஸ் வலை, டிஸ்கோவலை மற்றும் முக்கூட்டுவலை உட்பட சட்டவிரோத வலைகளைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. இதனால் சிறிய மீனினங்கள் பிடிபட்டு குறித்த மீனினமே அழிவடைந்து விட்டதாகவும் கடற்றொழில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் குடும்பங்கள், வாவி மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்வதுடன், 4,500 மீன்பிடி கலன்கள் வாவியில் பயன்பாட்டில் உள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X