2025 மே 07, புதன்கிழமை

மட்டு. பஸ் தரிப்பு நிலைய மலசலகூடம் 15 நாள்களாக பூட்டு

கனகராசா சரவணன்   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய மலசலகூடம், கடந்த இரண்டு வாரங்களாக பூட்டப்பட்டதன் காரணமாக, பயணிகள் பலர், அருகில் உள்ள களப்புப் பகுதியில் சிறுநீர் கழித்து வருவதால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டு. மாநகர சபையின் கீழ் உள்ள குறித்த பஸ் தரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொது மலசலகூடம்  குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மலசல கூடத்தில் உள்பகுதியில் நீர் நிரம்பி வெளியேற முடியாமல் தேங்கி நிற்பதால் அதுனுள் மலசலம் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அதன் வாசலில் கம்புகள் போடப்பட்டு, அங்கு செல்ல முடியாதவாறு மலசல கூடம் பூட்டப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாவும் பல்வேறு அசௌகரியங்களை  பயணிகள எதிர் நோக்கிவருவதாக, கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டுவந்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X