2025 மே 03, சனிக்கிழமை

மட்டு. போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு

Editorial   / 2020 மே 07 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா. மோகனதாஸ்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அதிகளவு குருதி தேவை உள்ளதால், குருதி கொடையாளர்கள் கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, குருதிக் கொடையாளர்களின் வரவு கணிசமாக குறைந்துள்ளமையால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு நோய் நிலைகளில் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குருதி பக்கெற்றுக்கள் தேவைப்படுவதால் குருதித் தானம் செய்ய முன்வரும் குருதிக் கொடையாளர்கள், பாதுகாப்பான முறையில் வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு வருகை தந்து, குருதிக் கொடைகளை வழங்குமாறு, வைத்தியசாலை நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X