2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மட்டு. போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 ஜனவரி 12 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும்  ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கே.கலாரஞ்சனி தெரிவித்தார்.

வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற  விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 

இது தொடர்பாக மேலும்  கருத்துரைத்த வைத்தியசாலை பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகளுக்கு வைரஸ் பரவாமலும் நோயாளிகளிருந்து  ஊழியர்களுக்குப் பரவாமலும் தடுப்பதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், போதனா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து, அருகில்  உள்ள வைத்தியசாலைகளில் தங்களுக்கான  சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கிளிக் வரும் நோயாளிகள் தங்களது மருந்துகளை, கிராம சேவகர் ஊடாகவும் அல்லது  0653133330, 0653133331 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவித்தல் விடுத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X