2025 மே 15, வியாழக்கிழமை

’மட்டு. முயற்சியாண்மை – 2018’ கண்காட்சி

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், “மட்டு முயற்சியாண்மை – 2018” எனும் தொனிப்பொருளிலான சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி, மட்டக்களப்பு - கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் எதிர்வரும் 03ஆம், 04ஆம், 05ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களுக்கான ஒரு சிறந்த சந்தை வாய்ப்பாகவும் அமையவிருக்கின்றதுடன், இதை இலவசமாகப் பார்வையிட முடியுமென, மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள், உணவு உற்பத்திகள், பனையோலை உற்பத்திகள், கைத்தறி உற்பத்திப்பொருட்கள், மட்பாண்ட உற்பத்திகள், சிற்பங்கள் மற்றும் பாதணிகள் என பல்வேறு உற்பத்திப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிப்பதனூடாக வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, ஒரு தன்னிறைவான சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதே, தமது எதிர்காலத்திட்டமென,  மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .