Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 17 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
உலக வங்கியின் நிதியுதவியுடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பயனுள்ள திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள், முயற்சியாளர்களைப் பயன்பெறுமாறு, மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
இது பற்றி கருத்துரைத்த அவர், “விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள், தொழில் முயற்சியாளர்கள், புதிதாகச் செயற்படவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கும் 50 சதவீதம் இலவச மானிய உதவியாகவும் 40 சதவீதம் இலகு கடன் உதவியும் வழங்கப்படவுள்ளது.
“வறுமையான மக்கள் வாழும் மாவட்டங்களுக்குமுன்னுரிமை என்ற அடிப்படையில், பெருந்தோட்டக் கைத் தொழில், ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சால் இது அமுல்படுத்தப்படவுள்ளது.
“இதற்காக, மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் பணிமனையில் நாளை (18) விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். நாளை மறுதினம் (19) விசேட குழுவால் இவை பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவை பெருந்தோட்டக் கைத்தொழில், ஏற்றுமதி கமத்தொழில்அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
“இந்தத் திட்டத்தில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்பிடி, அலங்கார மீன்கள், சிறியரக விவசாய உபகரனங்கள் , பூக்கள், மூலிகைச் செடிகள், மருந்துகள், பழங்கள், மரக்கறி, உணவு, மென்பானங்கள் களஞ்சியபடுத்தும் வசதிகள், சேதன விவசாயம் போன்றவற்றுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கமுடியும்” என அறிவித்தார்.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago