Princiya Dixci / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு வாவியின் குருமணிவெளி ஓடத்துறைப் பக்கமிருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று (22) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் குருமண்வெளி 12ஐ சேர்ந்த 68 வயதுடைய குமாரையா கோபாலசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், நேற்றிரவு (21) 11 மணி வரைக்கும் தமது வீட்டில் இருந்துள்ளதுடன், அதன்பின்னர் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையிலேயே, இன்று காலை வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக அறிந்த உறவினர்கள், அங்கு சென்று பார்வையிட்டு, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸாரும், மட்டக்களப்பு தடையவியல் பொலிஸாரும் சடலத்தை பார்வையிட்டதுடன், மரணித்த முதியவர் பாவித்ததாகக் கருதப்படும் ஊன்றுகோல் மற்றும் டோச் லைட் ஆகியவற்றறை, ஆற்றங்கரை ஓரமாக மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், சடலத்தைப் பார்வையிட்டு, பி.சிஆர் பரிசோதனைக்கு சடலத்தை உட்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
4 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Feb 2026