2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் கடும் மழை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 18 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கடும் மழை பெய்துவரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 19.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நவகிரிப் பகுதியில் 66.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் தும்பங்கேணிப் பகுதியில் 37.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பாசிக்குடாவில் 18.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் மைலம்பாவெளியில் 41.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் உன்னிச்சையில் 42.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் வாகனேரியில் 28.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் கட்டுமுறிவு பகுதியில் 41.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் உறுகாமத்தில் 83.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X