2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் கூடிய மழை வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 23 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் இன்று (23) காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில்  கிடைத்த மழை வீழ்ச்சியின் அளவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அம்மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (23) காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 68.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாவட்டத்தில் அடை மழை பெய்து வருவதால், வரட்சியால் பாதிக்கப்பட்ட பல இடங்களில்  மழை நீர் தேங்கியுள்ளது.
மேலும் ஆரையம்பதி, காத்தான்குடி கொக்கட்டிச்சோலை, மண்முனை வடக்கு உட்பட பல  இடங்களில்  வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறையில் இன்று (23) காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 52.3  மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, திருகோணமலையில்  இன்று (23) காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 65 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X