2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் சுகாதாரத்துறை அபிவிருத்திப் பணிகள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 31 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறை சார்ந்த  அபிவிருத்தித்திட்டங்கள பல ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் தெரிவித்தது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கான வைத்திய நிபுணர்கள் தங்கும் விடுதி மற்றும் இரத்த வங்கிக்கான கட்டடத்தொகுதி நிர்மாணத்துக்கு அடிக்கற்கள்; நாட்டப்படவுள்ளன. இவ்வைத்தியசாலையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக முதலமைச்சரால் 53.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

இதேவேளை, ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலையில்; சுமார் 90 இலட்சம் ரூபாய் செலவில்; பெண் நோயாளர்கள் தங்கும் விடுதி நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

மேலும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதியின் மூன்றாவது மாடிக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான வேலை ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இக்கட்டட நிர்மாணத்துக்காக ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீராவோடை மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக  சுமார் 6 மில்லியன் ரூபாயும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 43 மில்லியன் ரூபாயும் முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அச்செயலகம் தெரிவித்தது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X