2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் சுமார் 200 யுத்த வீரர்களின் குடும்பங்கள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 200 யுத்த வீரர்களின் குடும்பங்கள் உள்ளதுடன், அக்குடும்பங்களுக்குத் தேவையான உதவியை  வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ரணவிரு சேவை அதிகார சபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி ஆணையாளர் நிசாந்த கமலசிறி தெரிவித்தார்.

ரணவிரு சேவை அதிகார சபையின் கீழ், மாவட்ட ரீதியிலுள்ள ரணவிரு உறுப்பினர்களை இணைத்து புதிய ரணவிரு குழுக்களை அமைக்கும் பணி, இலங்கையின் பல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள யுத்த வீரர்களின் குடும்பங்களை ஒன்றிணைத்து மாவட்ட ரணவிரு குழுவை அமைக்கும் பணி, மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;, 'ரணவிரு சேவை அதிகார சபையின் மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மாவட்டங்களிலும் குழுக்கள்  அமைக்கப்படுகின்றன. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்குழு இதுவரையில் அமைக்கப்படவில்லை.

ரணவிரு சேவை அதிகார சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரையில் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட யுத்த வீரர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை. அவர்கள் இங்கு பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இருப்பினும், தற்போது அமைக்கப்படும் இந்தக் குழு மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட யுத்த வீரர்களின் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X