2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் மின்வெட்டு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 07 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் 12ஆம் திகதிவரை காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்தது.

நாளை செவ்வாய்க்கிழமை மணல்ப்பிட்டி, கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை, அம்பிலாந்துறை, தாந்தாமலை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு இடம்பெறும்.

புதன்கிழமை மாவடிவேம்பு, வந்தாறுமூலை, சித்தாண்டி, முறக்கொட்டஞ்சேனை, சந்திவெளி ஆகிய பகுதிகளில் மின்வெட்டு இடம்பெறும். 

வியாழக்கிழமை காலை ஆரையம்பதி ராசதரை கிராமம், ஆரையம்பதி பிரதான வீதி, காங்கேயனோடை, செல்வநகர் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு இடம்பெறும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை  பூலக்காடு பகுதியிலும் எதிர்வரும் சனிக்கிழமை களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு ஆகிய பகுதிகளிலும் மின்வெட்டு இடம்பெறும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X