Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (22) இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் கவனக்குறைவாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரயில்வே அதிகாரிகள் 4 பேரை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலுடன், ரயில் எஞ்;ஜின் ஒன்று வந்து மோதி விபத்து இடம்பெற்றது. இதன் காரணமாக குறித்த எஞ்ஜின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன், ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும் சேதமடைந்தன.
இவ்விபத்துத் தொடர்பில் உள்ளக விசாரணையை செய்த ரயில்வே அதிகாரிகள், போக்குவரத்து அணுகுதலுக்குப் பொறுப்பாகவிருந்த ரயில்வே அதிகாரி ஒருவரும் எஞ்ஜின் சாரதிகள் 3 பேரையும் இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
8 minute ago
10 minute ago
18 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
18 minute ago
27 minute ago